Home இந்தியா வயநாடு தொகுதியில் ராகுல் மனுத்தாக்கல்!

வயநாடு தொகுதியில் ராகுல் மனுத்தாக்கல்!

760
0
SHARE
Ad
படம்: நன்றி எஎன்ஐ

வயநாடு: கேரளாவின் வயநாடு தொகுதியிலும் தாம் போட்டியிட உள்ளதாக ராகுல் காந்தி அண்மையில் அறிவித்திருந்தார். தென்னிந்திய மக்களின் நலனிலும் தாம் அக்கறைக் கொண்டிருப்பதைப் பிரதிபலிப்பதற்காகவே, வயநாட்டில் போட்டியிடுவதாக ராகுல் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்,  கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இன்று வியாழக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அங்கு கூடியிருந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் ராகுலுக்கும், பிரியங்காவுக்கும் பெரிய அளவில் ஆதரவு அளித்தனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி நான்காவது முறையாக அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். அதே வேளையில் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவதை அக்கட்சி அண்மையில் அறிவித்திருந்தது