Home கலை உலகம் ஆசியாஸ் காட் டேலண்ட் வெற்றியாளர் யார்?

ஆசியாஸ் காட் டேலண்ட் வெற்றியாளர் யார்?

1310
0
SHARE
Ad

சிங்கப்பூர்: ஆசியாஸ் காட் டேலண்ட் நிகழ்ச்சியின் இறுதி சுற்று இன்று வியாழக்கிழமை இரவு 8.30 மணி அளவில் ஏஎக்ஸ்என் அலைவரிசையில் ஒளிபரப்பு ஆக உள்ளது. இம்முறை மலேசியாவைச் சேர்ந்த யாஸ்வின் சரவணன் மற்றும் நான்கு மலாய் பெண்மணிகளும் மலேசியாவைப் பிரதிநிதித்து, இந்த இறுதி சுற்றில் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.   

அமெரிக்க- கொரிய நாட்டு ரேப் பாடகரும், இந்நிகழ்ச்சியின் நடுவராகவும் பணியாற்றும், ஜேய் பார்க், 15 வயதுடைய யாஸ்வினைப் பற்றி குறிப்பிடுகையில், அவர் தனிச் சிறப்பு மிக்கவர் எனப் பாராட்டியுள்ளார். இம்மாதிரியான திறமைகளை நாம் பாராட்டியே ஆக வேண்டி உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இவ்வுலகில், வெறும் தமது சிந்தனை ஆற்றலை வைத்து, ஒருவர், கணக்கு ரீதியிலான பிரச்சனைகளுக்கு இவ்வளவு எளிதாக பதிலளிக்க முடியும் என்பதனை நான் இப்போதுதான் பார்க்கிறேன்” என பார்க் கூறினார்.

#TamilSchoolmychoice

யாஸ்வினோடு, மலேசிய நாட்டைச் சேர்ந்த மேலும் நான்கு மலாய் பாடகிகளான, நூர்பார்சினாமுகமட் அலி,நூர் ஷாமிமி மாக்திடார்,நோர்பாசிராமாலீக்,மற்றும் நூர் பாராஹிடா டோஹடி ஆகியோர் இந்த இறுதி சுற்றில் பங்கெடுக்க உள்ளனர்.

இப்போட்டியின் வெற்றியாளருக்கு 100,000 அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட உள்ளது.

ஆசியாஸ் காட் டேலண்ட் இறுதி சுற்று, இன்று ஏஎக்ஸ்என் (ஆஸ்ட்ரோ அலைவரிசை 701) மற்றும் ஏஎக்ஸ்என் எச்டியில் (ஆஸ்ட்ரோ அலைவரிசை 721) இரவு 8.3  மணிக்கு ஒளிபரப்பப்படும்.