Home உலகம் உலக வங்கியின் தலைவராக டேவிட் மால்பாஸ் பணியைத் தொடங்கினார்!

உலக வங்கியின் தலைவராக டேவிட் மால்பாஸ் பணியைத் தொடங்கினார்!

858
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க நிதித்துறை அனைத்துலக விவகார பிரிவின் துணைச் செயலாளரான டேவிட் மால்பாஸ் உலக வங்கி தலைவராக நியமிக்கப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை தனது பணியைத் தொடங்கினார் என சின் ஜுவா செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் உலக வங்கியின் 13-வது தலைவராவார். வரும் ஐந்து வருடங்களுக்கு டேவிட் இந்தப் பதவியை வகிப்பார். உலக வங்கியின் தலைவர் பதவிக்கு, டேவிட் மால்பாஸின் பெயரை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த பிப்ரவரி மாதமே பரிந்துரைத்திருந்தார்.

டிரம்பின் பரிந்துரைக்கு உலக வங்கி நிருவாக குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து டேவிட் மால்பாஸ் உலக வங்கியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். ஏழை நாடுகளின் வறுமையை ஒழிப்பதிலும் பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதிலும் உலக வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பை தொடர்ந்து நிலைநாட்ட உள்ளதாக  டேவிட் மால்பாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.