Home நாடு ரந்தாவ்: குலசேகரனின் இன ரீதியிலான பிரச்சாரம், தேர்தல் முடிவுகளை பாதிக்குமா?

ரந்தாவ்: குலசேகரனின் இன ரீதியிலான பிரச்சாரம், தேர்தல் முடிவுகளை பாதிக்குமா?

1054
0
SHARE
Ad

ரந்தாவ்: கடந்த வியாழக்கிழமை நடந்த, ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் கடைசி நேரப் பிரச்சாரத்தின் போது, மனிதவள அமைச்சரான எம்.குலசேகரனின், இன ரீதியிலான பிரச்சாரப் பேச்சுக் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, இணையத்தளச் செய்திகளிலும் வெளியாகியுள்ளது.

தமிழில் பேசிய அவரின் உரைக்கு கீழே மலாய் மொழியில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் வாக்குகளைப் பெறும் பொருட்டு அவர் இவ்வாறு பேசியதாகக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, குலசேகரனின் இந்த மேடைப் பேச்சு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களின் கவனத்தை ஈர்த்ததோடில்லாமல், கடைசி நேரத்தில், அப்பகுதி வாழ் மக்களுக்கு புலனக்குழுவில் பரவலாக அனுப்பப்பட்டுள்ளது.   

ஒரு வேளை இந்தியர்களின் வாக்குகள் டாக்டர் ஶ்ரீராமிற்கு செல்லவில்லை என்றால், எனக்கு அவமானம் ஏற்படும். நான் எப்படி வெளியில் தலைக்காட்டுவேன்? நம்மினம், ஒரே இரத்தத்தைச் சேர்ந்த ஶ்ரீராமிற்கே, இந்தியர்கள் வாக்குகள் செலுத்தவில்லை என்றால் என்னாவது?” என குலசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ஒரு வேளை தோற்றுவிட்டால், அமைச்சரவையில் உள்ளவர்கள் எங்களை நகைப்பார்கள். முகமட் ஹசான் வேற்று இனத்தவர், வேற்று மதக்காரருக்கு உங்கள் தமிழர்கள் வாக்குகளை செலுத்தி உள்ளார்கள் எனப் பேசுவார்கள். இதனை யோசித்துப் பாருங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் தற்போது அமைச்சராக பதவி வகிக்கும் போது, இந்தியர்கள் தங்களின் பிரச்சனைகளை சீன அமைச்சர்களிடமோ, அல்லது மலாய்க்கார அமைச்சர்களிடமோ கொண்டு செல்லலாம், ஆனால் அவர்கள் இந்திய அமைச்சர்களை சந்தித்தால் மட்டுமே மகிழ்ச்சி அடைகிறார்கள்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும், ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் பிரச்சாரத்தின் போது, தாம் இந்தியர்களின் உணவுக் கடையில்தான் சாப்பிட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், கடைசி நேரத்தில் இம்மாதிரியான காணோளியை வெளியிடுவதால் தேசிய முன்னணி மக்களின் ஆதரவை தன் பக்கம் வசமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.  

மேலும், சிலர், தேசிய முன்னணி தலைவர்கள் இம்மாதிரியான விவகாரங்களில் ஈடுப்பட்டால், அவர்கள் நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் குற்றம் கூறுவது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்களே இதனைச் செய்துள்ளதை மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தக் காணொளியால் இன்று சனிக்கிழமை வெளியிடப்பட இருக்கும் தேர்தல் முடிவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்பதனை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.