கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரின் மனைவியான ரோஸ்மா மன்சோர் 23 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இளஞ்சிவப்பு வைரத்தை வாங்கவில்லை எனும் அவரது கருத்துக்கு காவல் துறையினர் இன்று சனிக்கிழமை மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
பணமளிப்பு குற்ற விசாரணை புலனாய்வுக் குழு (அம்லா) தலைவரான காலீல் அஸ்லான் சிக் குறிப்பிடுகையில், அந்த வைரமானது 1எம்டிபி பணத்தைக் கொண்டு, நியூ யார்க்கில் உள்ள நகை வியாபாரியிடமிருந்து வாங்கப்பட்ட ஆதாரம் தங்கள் வசம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
“குறிப்பிட்ட அந்த இளஞ்சிவப்பு வைரமானது காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், அதனை வாங்கியதற்கான சான்றுகள் தெளிவாக உள்ளது” என அவர் கூறினார்.