Home நாடு ரந்தாவ்: தமக்கு வாக்களிக்கக் கோரிய ஶ்ரீராம், தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

ரந்தாவ்: தமக்கு வாக்களிக்கக் கோரிய ஶ்ரீராம், தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

810
0
SHARE
Ad
படம்: நன்றி ஸ்டார்

ரந்தாவ்: இன்று சனிக்கிழமை ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் ஶ்ரீராம் தமக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டது, அப்பகுதியில் தேவையற்றச் சூழலை ஏற்படுத்தி உள்ளது.

எல்லோரும் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என அவர் வாக்களிக்க வந்த மக்களிடம் கூறியுள்ளார்.

இது குறித்து பிரி மலேசியா டுடே செய்தித் தளத்திடம் பேசிய தேர்தல் ஆணைய துணைத் தலைவர் அஸ்மி ஷாரோம், ஒருவேளை ஶ்ரீராம் அவ்வாறு செய்திருந்தால் தமக்கு அது பெரும் வருத்தத்தைத் தருவதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

நம் அரசியல்வாதிகள் புத்திசாலிகள், தேர்தல் சட்டங்கள் என்னவென்று தெரிந்தவர்கள். அவற்றை அவர்கள் மதித்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.

தேர்தல் வாக்களிப்பு தினத்தின் போது, வாக்கு சேகரிப்பு செய்யக்கூடாது என்பது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எனக் கூறிய அவர், சட்டத்தை மீறி செயல்படுவதை ஏற்றுக் கொள்ள இயலாது எனக் குறிப்பிட்டார்.

இது குறித்துப் பேசிய பெர்சே அமைப்பின் தலைவர் தோமஸ் பான், தேர்தல் சட்டத்தின்படி, தேர்தல் நாளான இன்று, வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது, 1954-ஆம் ஆண்டு சட்டப்படி குற்றம் எனத் தெரிவித்துள்ளார்.