Home நாடு ஒஸ்மான் சபியான் சுல்தான் ஜோகூரைச் சந்தித்தார்!

ஒஸ்மான் சபியான் சுல்தான் ஜோகூரைச் சந்தித்தார்!

1063
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: முன்னாள் ஜோகூர் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான், அவரது பதவி விலகல் குறித்த விவகாரமாக இன்று சனிக்கிழமை காலை சுல்தான் ஜோகூரைச் சந்தித்தார்.

கடந்த செவ்வாயன்று, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், ஒஸ்மான் ஜோகூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகி விட்டதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று சுல்தானைச் சந்திக்க உள்ளதாகக் கூறிய ஒஸ்மான், இந்தச் சந்திப்பிறகுப் பிறகு, தமது பதவி விலகலுக்கான காரணத்தைத் தெரிவிக்க உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது, அடுத்து வரக்கூடிய மந்திரி பெசாருக்கு, சுல்தான் ஜோகூர் சில விதிகளை விதித்துள்ளதாக ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.      

#TamilSchoolmychoice

இதனிடையே, இன்று மாலை 6.30 மணியளவில், மீண்டும் ஒஸ்மான் சுல்தான் ஜோகூரை சந்திக்க உள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.