பிரிம் உதவித் தொகைக்குப் பதிலாக பந்துவான் சாரா ஹீடுப் திட்டத்தையும், பொது போக்குவரத்துக்கான மை50 மற்றும் மை100 எனும் மாதாந்திர கட்டண அட்டைகளை அறிமுகப்படுத்தியும் மக்களின் செலவை குறைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் இந்த பிரிம் உதவித் தொகையானது மக்களின், குறிப்பாக இளைஞர்களின் வாக்குகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, உண்மையாகவே தேவைப்படுபவர்களுக்கு உதவும் பொருட்டில் இதன் இலக்கு மாற்றப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.