Home உலகம் கொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 310-ஆக உயர்வு, 40 பேர் கைது!

கொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 310-ஆக உயர்வு, 40 பேர் கைது!

833
0
SHARE
Ad

கொழும்பு: இலங்கையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 310-க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்து வருவதாக செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 500-க்கும் அதிகமான மக்கள் இதில் காயமடைந்துள்ளதாக காவல்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு சம்பந்தமுள்ளவர்கள் என நம்பப்படும் 40 பேரை காவல் துறைகைதுசெய்துள்ளதாகஇலங்கைஅரசு தெரிவித்துள்ளது.

இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புதான் காரணம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில்அனைத்துலக காவல் அமைப்பான இண்டர்போல் குழு கொழும்பு விரைந்துள்ளது.