Home உலகம் பிலிப்பைன்ஸ்: 24 மணி நேரத்திற்குள் மேலும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸ்: 24 மணி நேரத்திற்குள் மேலும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

800
0
SHARE
Ad

பிலிப்பைன்ஸ்: மலேசிய நேரப்படி மதியம் 1.37 மணிக்கு பிலிப்பைன்ஸ்சின் மேற்கிந்தியப் பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சின் ஜுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

நேற்று திங்கட்கிழமை, 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இதுவரையிலும் 16 பேர் உயிரிழந்ததோடு, 80 பேர் காயமடைந்தனர் எனும் செய்திகள் வெளியாகி வரும் வேளையில், மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டு, மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரையிலும் அறிவிக்கப்படவில்லை.