Home நாடு 24 மணி நேரத்திற்குள் நீர் விநியோகம் வழக்கமுறைக்கு திரும்பும்!

24 மணி நேரத்திற்குள் நீர் விநியோகம் வழக்கமுறைக்கு திரும்பும்!

750
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுங்கை சிலாங்கூர் நீர் சிகிச்சை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் நேற்று இரவு புதன்கிழமை 11 மணியளவில் முடிவுற்றது என சிலாங்கூர் நீர் முகாமைத்துவ மற்றும் வாடிக்கையாளர் உறவு தலைவர் அப்துல் ராவுப் அகமட் கூறினார்.

இந்த நிலையம் மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் முக்கியமான குளம் மற்றும் முக்கிய விநியோக முறைக்கு நீர் விநியோகத்தை செயற்படுத்துவதற்கான செயல்முறை அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்னும் 24 மணி நேரத்திற்குள் மக்கள் மீண்டும் நீர் விநியோகத்தை எந்தவித தடையுமின்றி பெறலாம் என அவர் தெரிவித்தார். பெரும்பாலான பகுதிகளில், நீர் மீண்டும் வர ஆரம்பித்துவிட்டராக மக்கள் தெரிவித்து வர்கின்றனர்.

#TamilSchoolmychoice

அவசர நீர் வழங்கல் உதவிக்காக வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் டேங்கர் (SMS Tanker) என்று பதிவிட்டு 15300 அல்லது  019-2816793, 019-2800919 எண்களுக்கு வாட்ஸ் அப் அனுப்பலாம் என அவர் தெரிவித்தார்.

முன்னதாக, ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்களுக்கு, சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், மேம்பாட்டுப் பணிகள் காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கில் 577 பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்படவுள்ளதாகக் கூறப்பட்டது.