Home நாடு மெட்ரிகுலேஷன்: 4,000 இடங்களில் இந்தியர்களுக்கு எத்தனை இடம்?

மெட்ரிகுலேஷன்: 4,000 இடங்களில் இந்தியர்களுக்கு எத்தனை இடம்?

719
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டிற்கான மெட்ரிகுலேஷன் வகுப்புக்கான விண்ணப்பங்களில், இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் வெகுவாக குறைக்கப்பட்டதன் காரணமாக இந்தியர்களின் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்தது.

பூமிபுத்ரா மாணவர்களுக்கான 90 விழுக்காடு இடங்களும், பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்காக 10 விழுக்காடு இடங்களும் வழங்கப்பட்டதில் இந்திய மாணவர்களின் நிலை கேள்விக்குள்ளாகியது. சிறப்பான தேர்த்திப் பெற்ற மாணவர்கள் பலர் என்ன செய்வதறியாது குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர்.

இதற்கான எதிர்ப்புகள் ஓங்கியப் பின்பு, இதனை தீர்வு காணும் வகையில் நேற்று புதன்கிழமை, 25,000-ஆக இருந்த மாணவர் எண்ணிக்கையை,  40,000-ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்திருந்தார். ஆயினும், இன ரீதியிலான இட ஒதுக்கீட்டு முறையை தொடர்ந்து செயல்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்த அறிவிப்பினால் பூமிபுத்ரா அல்லாதவர்களிடமிருந்து பெருத்த எதிர்ப்பு எழுந்ததுள்ளது. மீண்டும் 13,500 கூடுதல் இடங்கள் பூமிபுத்ரா மாணவர்களுக்கு கொடுக்கப்பட இருக்கும் வேளையில், வெறும் 4,000 இடங்களுக்கு பூமிபுத்ரா அல்லாத இந்திய, சீன, சபா சரவாக் மாணவர்கள் போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த புதிய இட ஒதுக்கீட்டில் இந்திய மாணவர்களுக்கு எத்தனை இடங்கள் கொடுக்கப்படும் எனும் விவரங்கள் வெளியிடப்படவில்லை.