Home வணிகம்/தொழில் நுட்பம் சிங்கையில் நா.கோவிந்தசாமியின் 20-ஆம் ஆண்டு நினைவு நாள்

சிங்கையில் நா.கோவிந்தசாமியின் 20-ஆம் ஆண்டு நினைவு நாள்

1306
0
SHARE
Ad

சிங்கப்பூர் – தமிழ் மொழியை கணினித் துறையில் முன்னெடுப்பதில் பல்லாண்டுகளுக்கு முன்னரே மிகத் தீவிரமாக ஈடுபட்டவர் – பாடுபட்டவர் – சிங்கப்பூரைச் சேர்ந்த நா.கோவிந்தசாமி. இளம் வயதிலேயே அகால மரணமடைந்த கோவிந்தசாமி மறைந்து 20 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் அன்னாரின் தமிழ்ப் பணிகளை நினைவு கூரும் வகையில் அவரது 20-ஆம் ஆண்டு நினைவு நாளை சில முக்கிய நிகழ்ச்சிகளோடு சிங்கை தேசிய நூலக வாரியத்தின் தமிழ்ப் பிரிவும் வாசகர் வட்டமும் இணைந்து நடத்துகின்றன.

எதிர்வரும் 26 மே 2019-ஆம் நாள் சிங்கை தேசிய நூலகத்தின் தி போட் (The POD) எனும் அரங்கில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர் முனைவர் சீதாலட்சுமி, பத்திரிக்கையாளர் கனகலதா, இணைய முன்னோடி முனைவர் டான் டின் வீ, மலேசியாவின் கணினித் தொழில்நுட்ப வல்லுநர் முத்து நெடுமாறன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துவர்.

இந்த நிகழ்ச்சியில் சிராங்கூன் டைம்ஸ் பத்திரிக்கையின் ‘நாகோ சிறப்பு இதழ்’ வெளியிடப்படும்.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விழைபவர்கள் கீழ்க்காணும் மின்னஞ்சல் மூலம் தங்களின் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்:

read@nlb.gov.sg