Home இந்தியா கமல்ஹாசன் கைது செய்யப்படலாம், அதனால் பதற்றம் அதிகரிக்கலாம் என கமல் எச்சரிக்கை!

கமல்ஹாசன் கைது செய்யப்படலாம், அதனால் பதற்றம் அதிகரிக்கலாம் என கமல் எச்சரிக்கை!

793
0
SHARE
Ad

சென்னை: சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்த போது கோட்சே ஓர் இந்து தீவிரவாதி என்று தாம் கூறியதில் எந்த தவறுமில்லை என்று கூறினார்.  

இதே கருத்தை தாம் ஏற்கனவே மெரினாவில் பேசியிருப்பதாகவும், அங்கு பேசிய போது பெரிதுப்படுத்தாததை, அரவக்குறிச்சியில் பேசிய போது மட்டும் பெரிதுப்படுத்தி விட்டார்கள் என அவர் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட சர்ச்சை இது என்று கமல் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்துக்கள் யார்? ஆர்எஸ்எஸ் யார்? என்பதை பிரித்து பார்க்க வேண்டும். கைது செய்யப்படுவதற்கு பயப்படவில்லை, அப்படி நான் கைதானால் பதற்றம் அதிகரிக்கும்என கமல்ஹாசன் கூறினார்.