Home நாடு “கிட் சியாங்கின் முடிவு சரியானது, இனப் பதற்றத்தை தூண்ட முற்படுவார்கள்!”- அன்வார்

“கிட் சியாங்கின் முடிவு சரியானது, இனப் பதற்றத்தை தூண்ட முற்படுவார்கள்!”- அன்வார்

701
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது முக்கிய அரசியல் விமர்சகரான, இஸ்காண்டார் புத்ரியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங்கை தம்மோடு விவாதிக்குமாறு சவால் விடுத்திருந்தார். அதற்கு பதில் கூறும் வகையில் லிம் கிட் சியாங்கும் அவ்விவாத மேடை ஏற ஒப்புக் கொண்டார்.

அதன் பிறகு, ஒரு சில அரசியல் நண்பர்களின் அறிவுரையின்படி இந்த விவாத மேடையை தற்போதைக்கு தவிர்ப்பதே சரியான முடிவாக இருக்கும் என தாம் கருதுவதாக லிம் கூறியிருந்தார். இஸ்காண்டார் புத்ரி நாடாளுமன்ற உறூப்பினருமான லிம்மின் அந்த முடிவு சரியானது என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். இந்த விவாத மேடையினால் இனங்களுக்கிடையே பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

“கிட் சியாங் தைரியமானவர்தான். ஆனால், பெரும்பாலான நண்பர்கள் தற்போதைக்கு இந்த விவாதம் வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதனால், இனப் பதற்றம் ஏற்படும் என அஞ்சுகிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

அரசியல் எதிரிகளான நஜிப் மற்றும் கிட் சியாங், இம்மாதிரியான சவால்களை விடுவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், லிம் கிட் சியாங் நஜிப்பின் அரைகூவலுக்குத் தயார் என பதிலளித்துள்ளதோடு, அரசியல்வாதிகளின் அதிகார அத்துமீறல் குறித்த தலைப்பையும் முன்வைத்திருந்தார். பின்பு இரண்டு நாட்கள் கழித்து அவர் இந்த விவாதத்திலிருந்து பின்வாங்குவதாகத் தெரிவித்தார்.