உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று வாட்சாப். இதுவரை இலவசமாக உள்ள வாட்சாப் வருவாய் எதிர்நோக்கி விளம்பரங்களுக்கு இடம் கொடுக்க முடிவு செய்திருக்கிறது. ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்பவர்களிடம் வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது.
பேஸ்புக், யூடியூபில், டுவிட்டர் போன்றவற்றிலும் காணொளிகளுக்கு மத்தியிலும் பதிவுகளுக்கு இடையிலும் விளம்பரங்கள் வருவது போல் வாட்சாப் ஸ்டேட்டஸ்களுக்கு இடையிலும் இனி விளம்பரங்கள் தோன்ற உள்ளன.