Home உலகம் கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்த வங்காளதேசம்

கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்த வங்காளதேசம்

888
0
SHARE
Ad

இலண்டன் – உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் 10 நாடுகளில் பலம் வாய்ந்த குழுவாகக் கருதப்படும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வங்காளதேசம் சாதனை படைத்துள்ளது.

இலண்டன் ஓவல் அரங்கில் நடைபெற்ற இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நேற்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக நாணயத்தை சுண்டிப் போட்டதில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தது.

மொத்தமுள்ள 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 330 ஓட்டங்கள் எடுத்து வங்காளதேசம் தனது முதல் பாதி ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

#TamilSchoolmychoice

331 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, 50 ஓவர்களுக்கான பந்துகளை வீசி முடித்தபோது, 8 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனைத் தொடர்ந்து வங்காளதேசம் 21 ஓட்டங்கள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதுவரை நடந்த ஆட்டங்களில் நேற்று வங்காளதேசம் எடுத்த 330 ஓட்டங்கள்தான் மிக அதிகானதாகும்.

இன்று திங்கட்கிழமை இங்கிலாந்தின் நோட்டிங்ஹாம் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்தும், பாகிஸ்தானும் களமிறங்குகின்றன.