கோலாலம்பூர்: டேசா பாண்டானில் அமைந்துள்ள தனது வீட்டில் மலேயக் குறுங்கரடியை வளர்த்து வந்த குற்றத்திற்காக பாடகி ஒருவரை வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா (பெர்ஹிலிடான்) துறை கைது செய்துள்ளது.
பொது மக்களிடமிருந்து பெற்றப் புகாரைத் தொடர்ந்து 27 வயதுடைய அப்பெண் கைது செய்யப்பட்டார்.
பெர்ஹிலிடான் தலைவர் ஜெனரல் டத்தோ அப்துல் காடிர் அபு ஹாசிம் கூறுகையில், அவ்விலங்கு வளர்ப்பு குறித்து அத்துறைக்கு தெரியபடுத்தவில்லை என்றும், அதற்கான உரிமை ஆவணங்களும் அப்பெண்ணிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.
அனுமதியின்றி வனவிலங்கினை வீட்டில் வைத்து வளர்த்த குற்றத்திற்காக அப்பெண் 2010-க்கான வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் பிரிவு 716 கீழ் விசாரிக்கப்படுவார் எனவும் அப்துல் குறிப்பிட்டார். அக்கரடி சன்னலுக்கு வெளியே தலையை விட்டு பார்ப்பது போன்ற காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூகப் பக்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.