Home நாடு தங்கம் வென்ற சுரேஷுக்கு துணைப் பிரதமர், இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் வாழ்த்து!

தங்கம் வென்ற சுரேஷுக்கு துணைப் பிரதமர், இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் வாழ்த்து!

740
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உலக பாராலிம்பிக் போட்டியில், நாட்டின் அம்பு எய்தல் வீரரான எஸ்.சுரேஷின் வெற்றியைத் தொடர்ந்து துணைப் பிரதமர் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நெதர்லாந்தில் நடைபெற்ற உலக பாராலிம்பிக் அம்பு எய்தல் போட்டியில் கலந்துக் கொண்ட சுரேஷ், அமெரிக்காவின் எரிக் பென்னெட்டை 7-3 (26-28, 26-26, 27-25, 26-25, 29-27) என்ற புள்ளிகளில் தோற்கடித்தார்.

இந்த வெற்றியின் மூலமாக அவர் 2020-இல் தோக்கியோவில் நடைபெற இருக்கும் பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த வெற்றியைத் தொடர்ந்து சுரேஷுக்கு சமூகப் பக்கங்களில் மக்களின் ஆதரவும் வாழ்த்துகளும் குவிந்தன.   இந்த போட்டியில் ஆக கடைசியாக மலேசியாவுக்கு 2011-ஆம் ஆண்டு, மறைந்த விளையாட்டு வீரர் சலாம் சீடிக் மூலமாக தங்கம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.