Home இந்தியா இந்திய மாநிலங்களவையில் திமுக சார்பில் 3 இடங்கள்!

இந்திய மாநிலங்களவையில் திமுக சார்பில் 3 இடங்கள்!

686
0
SHARE
Ad

சென்னை: வருகிற ஜூலை 18-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

ஆறு இடங்களில் மூன்று இடங்கள் முறையே திமுக சார்பில் போட்டியிட்டு வெல்ல முடியும்.  மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், தொழிற்சங்கப் பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் ஆகியோர் இதில் இடம் பெறுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதன் அடிப்படையில் மாநிலங்களவையில், திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயரவுள்ளது.

கடந்தாண்டு நோக்கியா, யமஹா, ராயல் என்பீல்டு நிறுவன தொழிலாளர் பிரச்சனை எழுந்த போது, போக்குவரத்து தொழிற்சங்க பொதுச் செயலாளரான சண்முகம் முன்னின்று போராட்டத்தை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

#TamilSchoolmychoice

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான சர்ச்சை எழுந்த போது, அதை நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் விளக்கி இடைத் தேர்தலை நிறுத்தியவர் மூத்த வழக்கறிஞர் வில்சன்.

மூன்றாவது இடத்திற்கு மதிமுக செயலாளர் வைகோ போட்டியிடவுள்ளார். ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ள வைகோ தற்போது இரண்டாவது முறையாக மாநிலங்களவை (இராஜ்ய சபா) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.