Home வணிகம்/தொழில் நுட்பம் வாவே திறன் பேசிகளில் மீண்டும் அண்ட்ரோய்டு மென்பொருள்! அமெரிக்க அனுமதி கிடைக்குமா?

வாவே திறன் பேசிகளில் மீண்டும் அண்ட்ரோய்டு மென்பொருள்! அமெரிக்க அனுமதி கிடைக்குமா?

848
0
SHARE
Ad

பெய்ஜிங் – அமெரிக்கா, சீனா இடையிலான வணிகப் போர் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அண்மையில் நடந்து முடிந்த ஜி-20 நாடுகளுக்கான மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நாடு வாவே (Huawei)நிறுவனத்திற்கு மென்பொருள் மற்றும் இயங்குதள மென்பொருளை விநியோகிப்பதில் கடுமையானப் போக்கைக் காட்டாது என்றும் உரிய அனுமதிகளை  வழங்கும் என்றும் பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கருத்துரைத்த வாவே நிறுவனம் டிரம்பின் கருத்துகளைத் தாங்கள் மதிப்பதாகவும் அமெரிக்க வாணிப அமைச்சின் உத்தரவுகளுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தது.

எனினும் அமெரிக்காவின் வாணிபத் துறை அமைச்சு இதுகுறித்து இதுவரையில் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

#TamilSchoolmychoice

சீனா மீது அடுக்கடுக்கான வணிகப் போர் அதிரடிகளைத் தொடுத்து வந்த டொனால்ட் டிரம்ப் அரசாங்கம் தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டலாக இருக்கிறது என்று கூறி அண்மையில் வாவே நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலிட்டது.

இதில் ஓர் அங்கமாக சீனாவின் ஹூவாவெய் கைத் தொலைபேசிகளில் அண்ட்ரோயிட் மென்பொருள் உள்ளீடு பயன்படுத்தப்படுவதை கூகுள் நிறுவனம் மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அதன் பயனர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.