டர்ஹாம் (இங்கிலாந்து) – உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வரிசையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து நியூசிலாந்தைத் தோற்கடித்து அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.
முதல் பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களை நிறைவு செய்தபோது 8 விக்கெட்டுகளை இழந்து 306 ஓட்டங்களை எடுத்தது.
அடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் 307 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து 45-வது ஓவர்களிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதைத் தொடர்ந்து 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
நியூசிலாந்து நேற்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் புள்ளிகள் அடிப்படையில் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெறும் வாய்ப்பை அந்நாடு கொண்டிருக்கிறது.