Home இந்தியா “விலகியது விலகியதுதான்; வேறோருவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்” – ராகுல் காந்தி உறுதி

“விலகியது விலகியதுதான்; வேறோருவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்” – ராகுல் காந்தி உறுதி

763
0
SHARE
Ad

புதுடில்லி – நான் இனி காங்கிரஸ் தலைவரில்லை, காங்கிரஸ் பதவியிலிருந்து விலகியது விலகியதுதான், வேறொருவரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வேறொருவர் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் காங்கிரஸ் கட்சியின் நோக்கங்களுக்காகவும், எதிர்காலத்துக்காகவும் தேவைப்படும்போதெல்லாம் முன்வந்து தன்னால் ஆன பணிகளை ஆற்றவும், உழைப்பை வழங்கவும் தயாராக இருப்பதாகவும் ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

தனது பதவி விலகலுக்கான காரணங்களையும், ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கடிதத்தில் பட்டியலிட்டிருக்கிறார்.

ஆர்எஸ்எஸ் இயக்கம் திட்டமிட்டபடி நாட்டின் முக்கிய அரசாங்க அமைப்புகளை தனது அதிகாரத்திற்குள் கொண்டு வந்து விட்டதென்றும் அந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டிய ராகுல், கடந்த பொதுத் தேர்தலில் தாம் ஓர் அரசியல் கட்சியை எதிர்த்துப் போராடவில்லை – மாறாக நாட்டின் அனைத்து அரசாங்க அமைப்புகளையும் எதிர்த்துப் போராட வேண்டியதிருந்தது எனக் கூறினார்.

காங்கிரசின் தற்போதைய முதல் கட்டப் பணி ஒரு குழுவை நியமித்து காங்கிரசின் அடுத்த தலைவராக யாரை நியமிப்பது என்பதை முடிவு செய்வதுதான் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.