Home உலகம் கிரிக்கெட் : இங்கிலாந்து நியூசிலாந்தைத் தோற்கடித்து அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி

கிரிக்கெட் : இங்கிலாந்து நியூசிலாந்தைத் தோற்கடித்து அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி

1357
0
SHARE
Ad

டர்ஹாம் (இங்கிலாந்து) – உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வரிசையில் நேற்று புதன்கிழமை  நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து நியூசிலாந்தைத் தோற்கடித்து அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.

முதல் பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களை நிறைவு செய்தபோது 8 விக்கெட்டுகளை இழந்து 306 ஓட்டங்களை எடுத்தது.

அடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் 307 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து 45-வது ஓவர்களிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

நியூசிலாந்து நேற்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் புள்ளிகள் அடிப்படையில் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெறும் வாய்ப்பை அந்நாடு கொண்டிருக்கிறது.