Home நாடு “தேமுவின் ஆலோசனைக் குழு தலைவராக நஜிப்பை நியமித்தது பிற்போக்குத்தனமானது!”- நஸ்ரி

“தேமுவின் ஆலோசனைக் குழு தலைவராக நஜிப்பை நியமித்தது பிற்போக்குத்தனமானது!”- நஸ்ரி

733
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை தேசிய முன்னணியின் ஆலோசனைக் குழு தலைவராக நியமிக்க எடுத்த முடிவு  அக்கூட்டணியின் பிற்போக்குத்தனமான செயலாக இருக்கிறது என்று தேசிய முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளர் முகமட் நஸ்ரி அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நஜிப்பை ஆதரிப்பதில் வலுவாக இருந்த நஸ்ரி, அம்னோவுக்கு இந்த வளர்ச்சி நல்லதல்ல என்று கூறினார்.

இது பிற்போக்குத்தனமானது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தின் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

#TamilSchoolmychoice

நாம் (தேமு) எவரின் தலைமைத்துவத்தின் கீழ் தோற்றோம்? அவர் என்ன வகையான அறிவுரையை வழங்க முடியும்?” என்று நஸ்ரி கேள்வி எழுப்பினார். மேலும், நஜிப் தற்போது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணையை எதிர்கொள்கிறார் என்றும் அவர் கூறினார்.