Home உலகம் 2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் கைது!

2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் கைது!

1216
0
SHARE
Ad

இஸ்லாமாபாட்: கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை தாஜ் தங்கும் விடுதி மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சையட் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

லாகூரில் கைது செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். ஹபீஸ் சையது கைதான தகவலை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தொடர் வலியுறுத்தலால் தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு உலகநாடுகளின் நெருக்குதல் அதிகமானது. இதனை அடுத்து சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த ஹபீஸ் சையட் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன

#TamilSchoolmychoice

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி மும்பை பயங்கரவாத தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர். 60 மணி நேர முற்றுகையின்போது, துப்பாக்கி ஏந்தியவர்கள் காவல்துறையினரை பதுங்கி இருந்து தாக்கினர். இதில் நகரத்தின் மூன்று உயர் அதிகாரிகள் ஒரு வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அத்தாக்குதலை நடத்தினர். அவர்களில் 6 பேர் கொல்லப்பட்டனர்.