Home வணிகம்/தொழில் நுட்பம் உலகின் 100 பணக்காரர்களில் நால்வர் இந்தியர் – ஒருவர் தமிழர்

உலகின் 100 பணக்காரர்களில் நால்வர் இந்தியர் – ஒருவர் தமிழர்

1408
0
SHARE
Ad

நியூயார்க் – உலகின் முன்னணி வணிக ஊடகமான புளும்பெர்க் வெளியிட்டுள்ள உலகின் முதல் 100 பணக்காரர்களுக்கான பட்டியலில் நான்கு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவரான ஷிவ் நாடார் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராவார்.

தம்பி அனில் அம்பானி பெரும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்க, அண்ணன் முகேஷ் அம்பானியோ உலகின் 100 பணக்காரர்கள் பட்டியலில் 14-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவின் தலைவர் அசிம் பிரேம்ஜி, ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார், கோடக் நிறுவனத்தின் தலைவர் உதய் கோடக் ஆகிய மூவரும் பட்டியலில் இடம் பிடித்துள்ள மற்ற மூவராவார்.

#TamilSchoolmychoice

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

இரண்டாவது இடத்தை இந்த முறை பில் கேட்ஸ் இழந்துள்ளார். அவருக்குப் பதிலாக பிரான்ஸ் நாட்டின்  பெர்னார்ட் அர்னால்ட் இரண்டாவது பெரிய பணக்காரராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

பில் கேட்ஸ் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.