சம்பந்தப்பட்ட தரப்பினர் அவரவர் சமர்ப்பிப்புகளை செய்ய ஆகஸ்ட் 21-ஆம் தேதியை நீதிபதி நிர்ணயித்தனர்.
“நான் ஆதாரங்களில் திருப்தி அடைகிறேன். விசாரணையை நான் இத்துடன் முடிக்கிறேன். தீர்ப்பை வழங்க போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன,” என்று ராபியா கூறினார்.
அடிப் மரணம் தொடர்பான விசாரணை கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கியது. 41 நாள் விசாரணையின் போது மொத்தம் 30 சாட்சிகள் வரவழைக்கப்பட்டனர்.
சீ பீல்ட் கோயிலுக்கு அருகே நடந்த கலவரத்தின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அடிப் காலமானார்.