Home நாடு “அடிப் மரணம் குறித்த ஆணைப் பத்திரம் என் மூலம் வெளியிடப்படவில்லை!”- டோமி தோமஸ்

“அடிப் மரணம் குறித்த ஆணைப் பத்திரம் என் மூலம் வெளியிடப்படவில்லை!”- டோமி தோமஸ்

632
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் எவ்வாறு காலமானார் என்பதை வகைப்படுத்துவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆணைப் பத்திரத்தைத் தாக்கல் செய்ததில் தனது ஈடுபாட்டை அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் மறுத்துள்ளார்.

கடந்த ஜூலை 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ஆணைப் பத்திரத்தில், தமக்கு கீழே 1,200 சட்ட வல்லுனர்கள் இருந்தபோதிலும், அவர்களின் அன்றாட பணிகள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதில்லை என்று தோமஸ் கூறினார்.

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி அடிப் குடும்பத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தனக்கு எதிரான மறுதரப்பில்லா விண்ணப்பத்திற்கு அளித்த பதிலில் அவர் இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் முன் அவ்வாறு செய்வதன் மூலமாக டோமி நீதிமன்றத்தை அவமதித்ததாக அவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி ஆணைப் பத்திரத்தைத் தாக்கல் செய்த துணை அரசாங்க வழக்கறிஞரான ஹம்டான் ஹம்ஸாவை தாம் சந்திக்கவில்லை என்று டோமி குறிப்பிட்டார்.

அடிப் விசாரணை தொடர்பாக துணை அரசாங்க வழக்கறிஞர் தயார் செய்து தாக்கல் செய்த எந்தவொரு ஆணைப் பத்திரமும் முற்றிலும் அவரது கட்டுப்பாட்டுக்குள் உட்பட்டது.

நான் எந்த அறிவுறுத்தலையும் அவருக்கு கொடுக்கவில்லை அல்லது ஆணைப் பத்திரத்தின் உள்ளடக்கங்களைத் தாக்கல் செய்யச் சொல்லவில்லைஎன்று அவர் கூறினார்.