Home கலை உலகம் இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் விளையாட்டாளர் முரளிதரனாக விஜய் சேதுபதி!

இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் விளையாட்டாளர் முரளிதரனாக விஜய் சேதுபதி!

876
0
SHARE
Ad

சென்னை: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இது குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது.

இதனை அடுத்து அந்த கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் இப்படத்தின் பணிகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன் என்பதால் இந்த படத்திற்கு “800” என்று பெயரிடப்பட்டுள்ளது.

எம்எஸ் ஸ்ரீபதி இப்படத்தினை எழுதி இயக்குகிறார். தமிழில் உருவாகும் இந்த படம், உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இவ்வாண்டு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது. 2020-ஆம் ஆண்டு இறுதிக்குள் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.