Home One Line P2 காஷ்மீரில் திடீர் பதற்றத்திற்கு காரணம் என்ன? 25,000-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் குவிப்பு!

காஷ்மீரில் திடீர் பதற்றத்திற்கு காரணம் என்ன? 25,000-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் குவிப்பு!

852
0
SHARE
Ad

ஜம்மு- காஷ்மீர்: காஷ்மீருக்கான சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சாசனத்தின் 37-வது பிரிவு நீக்கப்படலாம் என்றும், அதனால் பெரும் வன்முறை அப்பகுதியில் வெடிக்கலாம் என்பதால் கூடுதல் பாதுகாப்பு படைகள் அனுப்பபடுவதாகப் பேசப்படுகிறது

காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, 10,000 துணை இராணுவத்தினர் குவிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக மேலும் 25,000-க்கும் அதிகமான துணை இராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்

கடந்த வாரம் காஷ்மீருக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆய்வு செய்த பிறகே இந்த துணை இராணுவ படையினர் குவிக்கப்படுவதாக கூறப்படுகிறது

#TamilSchoolmychoice

இதனிடையே, ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை அமர்நாத் கோயிலுக்கு யாத்திரை செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதகமான வானிலை காரணமாகவே, தற்காலிகமாக யாத்திரையை நிறுத்துவதற்கு காரணம் என மத்திய அரசு தெரிவித்தாலும், வானிலை நிலைகளில் எந்த ஒரு பெரிய மாற்றங்களும் அந்த பகுதியில் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. 

முக்கிய வழிபாட்டு தலங்கள், நீதிமன்றங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் வீரர்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன. இதனால், அப்பகுதியில் பதற்ற நிலை அதிகரித்து மக்கள் பயம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.