Home One Line P2 நடிப்பை தவிர்த்து விளையாட்டு போட்டிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் அஜித்!

நடிப்பை தவிர்த்து விளையாட்டு போட்டிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் அஜித்!

928
0
SHARE
Ad

சென்னை: நடிகர் அஜித் சமீபத்தில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகின.  கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் கலந்துக் கொண்டார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு இல்லாமல் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயப் போட்டிகள், துப்பாக்கி சுடுதல், டிரோன் தயாரிப்பது போன்ற பலவற்றிலும் அதிகமாக தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் ஆளுமையாகவும் அஜித் திகழ்ந்து வருகிறார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள காவல் துறை பயிற்சி பள்ளி மைதானத்தில் நாற்பத்து ஐந்தாவது தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் அஜித் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித் குமார் 314 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.