கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் அப்துல்லா புதிய மலாயா தலைமை நீதிபதி டான்ஸ்ரீ அசாஹர் முகமட்டுக்கு பதவி நியமன ஆணையை வழங்கினார்.
கடந்த மே 16-ஆம் தேதி ஓய்வு பெற்ற டான்ஸ்ரீ சாஹாரா இப்ராகிமுக்கு பதிலாக மத்திய அரசியலமைப்பின் 122பி பிரிவின்படி அசாஹரின் நியமனம் நேற்று வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
இங்குள்ள இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற இந்த விழாவில், தலைமை நீதிபதி டத்தோஶ்ரீ தெங்கு மைமுன் துவான் மாட் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் டான்ஸ்ரீ அகமட் மாரோப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
63 வயதான அசாஹர் முன்னாள் மூத்த கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர். அதோடுமட்டுமில்லாமல், நீதித்துறையில் பரந்த அனுபவம் பெற்றவர்.