Home One Line P1 50 காசு விலை ஏற்றத்துடன் உத்துசான் மலேசியா நாளிதழ் தொடர்கிறது!

50 காசு விலை ஏற்றத்துடன் உத்துசான் மலேசியா நாளிதழ் தொடர்கிறது!

756
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உத்துசான் மெலாயு பெர்ஹாட் நிறுவனம் அதன் செயல்பாடுகளை மூடாது என்றும், அவர்களின் அன்றாட வெளியீட்டை நிறுத்தாது எனவும் உத்துசான் மெலாயு குழுமத்தின் நிருவாகத் தலைவர் அப்துல் அசிஸ் ஷேக் பாட்சித் தெரிவித்தார் .

உத்துசான் மலேசியா மற்றும் கொஸ்மோ செய்தித்தாள் ஆகியவற்றின் விற்பனை விலையை 50 காசுக்கு உயர்த்துவதன் மூலம் அதன் விற்பனை தொடரும் என்று அவர் கூறினார்.

புதிய விலை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உத்துசான் மலேசியா செய்தித்தாள் 2 ரிங்கிட்டுக்கு விற்கப்படும். அதே நேரத்தில் கொஸ்மோ 1.50 ரிங்கிட்டுக்கு விற்கப்படும்.

#TamilSchoolmychoice

முன்னதாக நேற்று செவ்வாய்க்கிழமை உத்துசான் மெலாயுவின் உயர் நிருவாகத்தினரை அம்னோ தலைவர் டாக்டர் அகம்ட சாஹிட் ஹமீடி சந்தித்தார்.

உத்துசான் மலேசியா ஊழியர்களுக்கான ஊதிய நிலுவைத் தொகையை அம்னோ தனது சொந்தப் பணமாக 1.6 மில்லியன் ரிங்கிட்டை கொடுத்து உதவியுள்ளதாகத் தெரிவித்தார். அதாவது 800 உத்துசான் ஊழியர்களுக்கு ஒரு குறுகிய கால தீர்வாக 2,000 ரிங்கிட் வழங்க ஒப்புக் கொண்டதாக அவர் கூறினார். ஆயினும், நீண்ட காலத்திற்கு இது எவ்வாறு தொடரப்படும் என்ற உத்தரவாதம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.