Home One Line P1 இன- மத உணர்ச்சிகளை தூண்டுபவருக்கு எதிராக, எச்சரிக்கை கிடையாது, விசாரிக்கப்பட்டு, கைது செய்யப்படுவர்!

இன- மத உணர்ச்சிகளை தூண்டுபவருக்கு எதிராக, எச்சரிக்கை கிடையாது, விசாரிக்கப்பட்டு, கைது செய்யப்படுவர்!

688
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரசியல் தலைவர்கள் உட்பட, இனம் மற்றும் மத உணர்ச்சிகளைத் தொட முயற்சிப்பவர்களுக்கு எதிராக இனி எச்சரிக்கைகள் எதுவும் இல்லாமல், அவர்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

பொறுப்பற்ற தரப்பினரால் நாட்டில் அமைதியின்மைக்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டு, அது ஒரு சிலரை வழிதவறி சிந்திக்க ஊக்குவித்துள்ளதாக அப்துல் ஹாமிட் கூறினார்.

ஏமாற்றப்பட்ட அந்நபர்கள் சட்டவிரோதமான விவகாரங்களையும், இனவெறி காணொளிகளைப் பதிவுசெய்து அவற்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டும் வருகின்றனர். மேலும், இந்நாட்டு தலைவர்களையும் அவமதித்து கேலி செய்து வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்..

#TamilSchoolmychoice

சில தரப்பினரின் அரசியல் விளையாட்டில் சிக்கியிருப்பதை உணராமல் ஏமாற வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். காணொளி அனுப்பிய நபருக்கு தலையும் வாலும் புரியாது, இறுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்படுவார்கள். பொறுப்பற்ற மற்றும் உணர்ச்சிபூர்வமாக செயல்பட வேண்டாம் என்று நான் அறிவுறுத்துகிறேன்,” என்று அவர் கூறினார்.

பல்வேறு இனப்பிரச்சனைகள் மக்களின் அமைதிக்காக மிகச் சிறந்த முறையில் காவல் துறையினரால் தீர்க்கப்பட்டதாக அவர் கூறினார்.

அரசியல் தலைவர்களை பொறுப்புணர்வுடன் இருக்குமாறு நான் அழைக்கிறேன், ஏனெனில் நாம் விரைவில் சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். பொறுப்பற்ற பல அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. எல்லா மக்களும், நம் நாட்டில் என்ன நடக்கிறது என்று பயப்படுகிறார்கள். பொறுப்புடன் செயல்படுங்கள்.  அறியாமையால் அறிக்கைகளை வெளியிட வேண்டாம், இதையெல்லாம் நிறுத்துங்கள்என்று அவர் கூறினார்.