Home One Line P1 “என் கணவரிடமிருந்து பெற்ற வருமானங்களுக்கு வரி விதிப்பதா?”- நூர்யானா நஜ்வா

“என் கணவரிடமிருந்து பெற்ற வருமானங்களுக்கு வரி விதிப்பதா?”- நூர்யானா நஜ்வா

767
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2011 முதல் 2017 வரை செலுத்தப்படாத வருமான வரிகளில் 10.3 ரிங்கிட் மில்லியன் வரியைச் செலுத்துமாறு உள்நாட்டு வருமான வரித்துறை உத்தரவிட்டதை அடுத்து, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மகள் அரசாங்கத்தை குற்றம் சாட்டி உள்ளார். இதற்கு பின்னணியில் இருந்து செயல்படுவது அரசாங்கம்தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு வருமான வரித்துறையால் வரி விதிக்கப்பட்டுள்ள வருமானம் அவரது கணவர் டானியார் கெசிக்பாயேவ் கொடுத்த பணம் என்று நூர்யானா நஜ்வா நஜிப் வலியுறுத்தினார்.

“நாங்கள் சந்திப்பதற்கு முன்பே என் கணவரும் அவரது குடும்பத்தினரும் பணக்காரர்களாக இருந்தார்கள், என் மாமியார் கஜகஸ்தானில் பணக்காரரை திருமணம் செய்து கொண்டவர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், கணவரிடமிருந்து மனைவிக்கு பணம் செலுத்துவதை வருமானமாக நீங்கள் கருதினால், இந்த நிதி பரிமாற்றம் வெளிநாட்டிலிருந்து வந்தது, உள்நாட்டிலிருந்து அல்ல, ஆகவே வரி விதிக்கப்படக்கூடாது.” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“கடந்த ஆண்டு முதல் அவர்கள் என்னைத் தணிக்கை செய்யத் தொடங்கினர். நான் வெளியில் இருந்து வருமானம் பெற்றது பெரும்பாலானவை என் கணவரின் குடும்பத்தினரிடமிருந்து பணப் பரிமாற்றம் என்பதைக் காட்டும் பரிமாற்ற ஆவணங்களின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் நான் ஒப்படைத்து வருகிறேன்.” என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், 2011 முதல் 2017 வரை 10.3 மில்லியன் ரிங்கிட் செலுத்தப்படாத வருமான வரியைப் பெற நூர்யானா மீது நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்நாட்டு வருமான வரித்துறை அறிவித்திருந்தது. இம்மாதிரியான நடவடிக்கைகள் தனது ஒட்டு மொத்த குடும்பத்தை எதிர்க்கும் அரசாங்கத்தின் முயற்சி என்று நூர்யானா விவரித்தார்.