மகாதீரின் அறிக்கையை கவனமாகப் படித்தால், பிரதமருக்கு மலேசிய இந்தியர்களை இழிவுபடுத்தும் எண்ணம் இல்லை என்பதைக் காட்டும் என்று டென்னிஸ் தெரிவித்தார்.
“இந்த வார்த்தை இந்தியாவில் வேர்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், இப்போது அது நன்கு பயன்படுத்தப்படும், மேலும் நன்கு அறியப்பட்ட ஆங்கில வார்த்தையாகும். அதாவது அது தீண்டத்தகாததாகும்” என்று அவர் கூறினார்.
“பிரதமர் வெறுமனே லினாஸை ஒரு வெளிநாட்டவர் போல் கருதுவது தவறு என்று சுட்டிக் காட்டினார்.” என்று அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய அனுகுமுறை வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை பாதிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
பிரதமரின் அக்கருத்து காப்பார் பிகேஆர் உட்பட பல தரப்பினரின் எதிர்ப்பினைப் பெற்றது. பிரதமருக்கு எதிராக காவல் துறையில் புகார் அறிக்கையும் அளிக்கப்பட்டது.
“நாம் கவலைப்பட வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளன, ஆனால், இது அவற்றில் ஒன்றல்ல” என்று அவர் கூறினார்.