இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரோடக்க்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள இப்படத்தில், நடிகர் தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, ஜான் விஜய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியுள்ளார். தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ், மகிழ்ச்சி ஆகிய ஆல்பங்களின் இசையமைப்பாளர் தென்மா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் திரைக்கு வரும் இப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டு அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. கீழ்காணும் இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:
Comments