Home One Line P1 ஏஏடிசி: மாணவர்களுக்கு அரசு கடன் வழங்குவதாக உறுதியளித்த பயிற்சி மையம் விசாரிக்கப்படுகிறது!

ஏஏடிசி: மாணவர்களுக்கு அரசு கடன் வழங்குவதாக உறுதியளித்த பயிற்சி மையம் விசாரிக்கப்படுகிறது!

638
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கல்வி கடன்களை வழங்கத் தவறியதால் அதன் மாணவர்களின் எதிர்ப்புக்கு ஆளான ஏரோநாட்டிகல் பயிற்சி மையத்தை (ஏஏடிசி) கல்வி மேம்பாட்டு நிதிக் கூட்டுத்தாபனம் (பிடிபிகே) விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.  

இன்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையின் வாயிலாக இது குறித்து தெரிவித்த பிடிபிகே, ஏஏடிசி நிறுவனம் பதிவு செய்யப்படவில்லை என்றும், எனவே அது கடன் வசதிக்கு தகுதியற்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, திறன் மேம்பாட்டு நிதிச் சட்டம் 2004-இன் கீழ் ஏஏடிசியை விசாரிப்பதாக பிடிபிகே கூறியுள்ளது. எந்தவொரு நிறுவனமும் தங்களிடம் பதிவு செய்யப்படாத போது, அவர்கள் பிடிபிகேயின் பெயரை பயன்படுத்தி மாணவர்கள் கடன் வசதிப் பெற்றுக் கொள்ளலாம் என்று விளம்பரம் செய்வதற்கு உரிமை இல்லை என்று அது தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது 20,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி,  மாணவர் சங்கத்தை அமைத்ததற்காக கல்லூரி நிருவாகம் இரண்டு மாணவர்களை வெளியேற்றிய பின்னர், மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதன் தொடர்பாக ஏழு மாணவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அரசு கடன் பெறுவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதாகவும், மாணவர்கள் வங்கிக் கடன்களைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் ஏஏடிசி கல்லூரிக்கு எதிராக மாணவர்கள் அதிருப்தி அடைந்ததைத் தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக நேற்று புதன்கிழமைஇப்பயிற்சிக் கல்லூரியின் நிருவாகமும்,  22 மாணவர்களும், கலந்துரையாடல் ஒன்றினை மனிதவளத்துறை அமைச்சில் மேற்கொண்டனர். சந்திப்பின் இறுதியில், ஏரோநாட்டிக் பயிற்சி மையக் கல்லூரியின் மாணவர் அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளரை மீண்டும் கல்வியைத் தொடர கல்லூரி நிருவாகம் ஏற்றுக் கொண்டதாக மாணவர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், அங்கு பயிலும், மாணவர்களுக்கான பிடிபிகே கடன் உதவி விரைவில் பெற்றுத் தரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.