Home One Line P2 தமிழ் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன், சர்ச்சையைக் கடந்த நம்பிக்கையான உழைப்பு!

தமிழ் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன், சர்ச்சையைக் கடந்த நம்பிக்கையான உழைப்பு!

1019
0
SHARE
Ad

சென்னை: தமிழ் திரையுலகின் அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ யாரெனும் கருத்துகள் பல ஆண்டுகளாக இரசிகர்கள் மத்தியிலும், திரையுலக வட்டாரங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில், ஒட்டு மொத்தமாக அது நடிகர் விஜய் மற்றும் அஜித்தை நோக்கிய பட்டமாகவே இருந்து வந்துள்ளது.

நடிகர் விஜய் மற்றும் அஜித்துக்கு மிகப்பெரிய இரசிகர்கள் பட்டாளம் உலகெங்கிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில நேரங்களில், இவர்களின் படங்கள் ரஜினிகாந்தின் படங்களை மிஞ்சி வசூல் சாதனைப் படைத்துவிடும்.

அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்கள் தான் என்று இரசிகர்கள் கூட்டமும், மக்களும் எண்ணிக் கொண்டிருக்கையில், தற்போது இந்தப் பட்டியலில் நடிகர் சிவகார்த்திகேயனின் பெயரை திணித்து நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

#TamilSchoolmychoice

இக்கருத்தானது, அரசியல் பார்வைக்கு தனிப்பட்ட கருத்தாக வெளிப்பட்டாலும், நடிகர் சிவகார்த்திகேயன் போன்றோர் ஏன் தமிழ் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டாராக ஏன் இருக்கக்கூடாது எனும் கேள்வியும் எழுந்துள்ளது.

திரையுலகம் என்பது சம்பந்தப்பட கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர்களை மட்டுமே சார்ந்ததல்ல, அதனையும் கடந்து அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதை, பாத்திரங்கள் என்று விரிவடைகிறது. திரையுலகில் கால் பதித்த ஒரு சில வருடங்களிலேயே, தனக்கென ஓர் இரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி அதற்கான பாதையில் திரைப்பட தயாரிப்பு, புதிய முகங்களின் அறிமுகம் என்று தம்மை அற்பணித்துக் கொண்டு சிவகார்த்திகேயன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.   

தற்போது, நடிகர் சிவகர்த்திகேயன் பசங்க திரைப்படத்தின் பாண்டிராஜ் இயக்கும்நம்ம வீட்டுப்பிள்ளைபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்துஹீரோஎன்ற படத்தில் அனைவரையும் மிரளவைக்கும் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

ஹீரோபடத்தை மிகப்பெரிய செலவில்  கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் அபய் தியோல், விவேக், யோகி பாபு மற்றும் பலர் நடிக்க உள்ளனர். இப்படத்தில் கதாநாயகியாக கல்யாணி நடிக்கவுள்ளார். இவர் பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனின் மகள். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இப்படத்தை, இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கவுள்ளார்

திரைப்படம் தொடர்பான எந்த பின்புலமும் இல்லாமல் சாதாரண குடும்பத்திலிருந்து வெள்ளித்திரையில் சாதித்து சூப்பர் ஸ்டார் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன் என்று சசிகலா பேசியுள்ளார்.