Home One Line P1 மீண்டும் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய 6 காணொளிகள் வெளியிடப்பட்டன!

மீண்டும் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய 6 காணொளிகள் வெளியிடப்பட்டன!

835
0
SHARE
Ad
படம்: நன்றி மலேசியாகினி

கோலாலம்பூர்: முகமட் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளிகள் மீண்டும் சமூகப் பக்கங்களில் உலாவத் தொடங்கியுள்ளன. இம்முறை, மேலும் ஆறு காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

முன்பு போலவே, 80-க்கும் மேற்பட்ட ஊடக உறுப்பினர்கள் மற்றும் பல அரசியல்வாதிகள் அதிகாலையில் ஒரு வாட்சாப் குழுவில் சேர்க்கப்பட்டனர்.

வீடியோ டெர்கினி அஸ்மின் (அஸ்மினின் சமீபத்திய வீடியோ)” என்ற தலைப்பில் இந்த குழு இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.35 மணிக்கு அமைக்கப்பட்டது. அதில் பாலியல் செயல்களில் ஈடுபட்ட இருவரின் காணொளிகள் வெளியிடப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்த காணொளிகள் ஆறு மூன்று நிமிட காணொளிகளாக பிரிக்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு அனுப்பப்பட்ட அதே காணொளிகள் என்று மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது.

செய்தியாளர்களைத் தவிர, அமைச்சர்கள் சிலர் உட்பட, அம்னோ உச்சமட்டக் குழு உறுப்பினர் லோக்மான் நூர் அடாமும் அக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்தில் இக்காணொளிகள் வெளியானதைத் தொடர்ந்து, அந்நேரத்தில் மூலத்தொழில் துணை அமைச்சரின் முன்னாள் அந்தரங்கச் செயலாளராக இருந்த ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ், அந்த காணொளியில் இருந்தது தாம்தான் என்று கூறினார். பொருளாதார விவகார அமைச்சரும், பிகேஆர் துணைத் தலைவருமான அஸ்மின், அக்காணொளியில் இருப்பது தாம் அல்ல என்று மறுத்தார்.