Home One Line P2 செப்டம்பர் 11: தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தூண்டுதலாக அமைந்த நாள்!

செப்டம்பர் 11: தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தூண்டுதலாக அமைந்த நாள்!

1020
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய துயர் சம்பவமாக 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதல் அமைகிறது.

சுமார் 3,000 உயிர்களை பலி வாங்கிய 9/11 தீவிரவாத தாக்குதலின் 18-ஆம் ஆண்டு நினைவு நாளை அமெரிக்கா இன்று புதன்கிழமை அனுசரித்து வருகிறது.

இந்நாளில், அன்று அமெரிக்க நேரப்படி சரியாக காலை 8.45 மணிக்கு நியூயார்க்கில் உள்ள உலக வணிக மைய கட்டடத்தின் வடக்கு கட்டிடத்தில் கடத்தப்பட்ட விமானம் ஒன்று மோதியது. உலகத்தின் பார்வையையே அமெரிக்கா பக்கம் திரும்பச் செய்த துயரச் சம்பவமாக அது மாறியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு பல்வேறு அமைப்புகள் உலகெங்கும் தடை செய்யப்பட்டன.

#TamilSchoolmychoice

இதன் விளைவாக ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரின் போர் நடவடிக்கைகள் ஆரம்பமாகியது.

இந்தத் தாக்குதலை தொடர்ந்து, உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் மற்றும் தீவிரவாத தாக்குதலில் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் பெருநிலப்பரப்பில் மோசமான தீவிரவாத தாக்குதலின் தொடக்கத்திற்கான அறிவிப்பாக இந்த சம்பவம் நடைபெற்றது. அதுமட்டுமின்றி, இந்த சம்பவத்திற்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள ஜிஹாதிகளுக்கு இது தூண்டுதலை அளித்தது எனலாம்.

இதற்கு பிறகு உலகெங்கிலும், பல்வேறு தீவிரவாத சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பாலி தீவு முதல் அண்மையில் இலங்கை வரை பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.