Home One Line P1 “அஸ்மின் கடந்த கால நிகழ்வுகளை புறக்கணித்து மீண்டும் கட்சிக்குள் வர வேண்டும்!”- ஜோஹாரி அப்துல்

“அஸ்மின் கடந்த கால நிகழ்வுகளை புறக்கணித்து மீண்டும் கட்சிக்குள் வர வேண்டும்!”- ஜோஹாரி அப்துல்

676
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் கட்சிக்குள் உள்ள உள் பிளவினைகளை விரைவில் தீர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை, பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் அவரது துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி ஆகியோருக்கு இடையிலான பதற்றம் கட்சியை கீழ் சாய்க்கும் அபாயத்தை கொண்டுள்ளது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

கட்சி ஒற்றுமையைத் தக்கவைக்க கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பது மிக முக்கியமானது என்று சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹாரி அப்துல் கூறினார்.

#TamilSchoolmychoice

நாங்கள் ஒவ்வொரு வாரமும் அரசியல் பணியகக் கூட்டமும், ஒரு மாதத்திற்கு ஒரு முறை, கட்சியின் உச்சமட்டக் கூட்டமும்  நடத்துகிறோம். எந்தவொரு மனக்குழப்பமும் மகிழ்ச்சியற்ற தன்மையும் அங்கேயே களையப்பட வேண்டும், ” என்று ஜோஹாரி கூறினார்.

அஸ்மின் கடந்த கால நிகழ்வுகளை புறக்கணித்து மீண்டும் கட்சிக்குள் வருவார் என்று நம்புவதாக ஜோஹாரி கூறினார்.

நீங்கள் ஒரு தலைவர், இந்த சிக்கலை தீர்க்க முடியும்என்று ஜோஹாரி கூறினார்.