Home One Line P2 மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சியில் திளைத்த ஜோகூர் மின்னல் நேயர்கள்

மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சியில் திளைத்த ஜோகூர் மின்னல் நேயர்கள்

1329
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி ஜோகூர்பாருவில் நடைபெற்ற மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி  ஜோகூர் நேயர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

“தீபாவளி கொண்டாட்டம் மின்னலோடு தொடங்குங்கள்” என்ற மின்னல் பண்பலையின் நோக்கம் இனிதே இந்த நிகழ்ச்சியின் மூலம் நிறைவேறியது.

ஆம், நேயர்களை இசைக் கொண்டாடத்தில் இணைய வைத்து, மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. செப்டம்பர் 21ம் தேதி, ஜோகூர் ஆர்.டி. எம் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 1200க்கும் அதிகமான நேயர்கள் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

#TamilSchoolmychoice

முதல் முறையாக ஜோகூரில் பிரபல கலைஞர்களின் அசத்தலான படைப்புகளோடு, கண்கவரும் நடனங்களோடு,  நேரடியாக இசைக் கருவிகளை வாசிக்கப்பட்டு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக இருந்ததாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த நேயர்களில் ஒருவரான கணேசன் தம் கருத்தைப் பகிர்ந்து கொண்டார். இது போன்று நிகழ்ச்சிகள் மேலும் மின்னல் பண்பலை படைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரபல கலைஞர்கள் ஹவொக் பிரதர்ஸ் படைப்புகள் இளம் தலைமுறையினரிடம் பலத்த வரவேற்பு பெற்றது. அதே வேளையில், முன்னணி பாடகர்கள் திருச்செல்வம், சர்மிளா சிவகுரு, டாச்சாயினி, சித்தார்த்தன், சுகன்யா, லூர்துநாதன், சிவா, கேஷ்வினி, கார்த்திக், மதன் இவர்களின் பாடல்கள் நேயர்களை வெகுவாக கவர்ந்தது.

நண்டு ரமேஷ், முருகேசன் இவர்களோடு புதிய நகைச்சுவை கலைஞர்கள் குமரவர்மன், டினாசினி, ஜெகதீஷ் ஆகியோர்  அட்டகாசமான நகைச்சுவையால் ஜோகூர் மாநில நேயர்களை சிரிக்க வைத்தனர்.

நேயர்களுக்குத் தரமான படைப்புகளை மின்னல் ஒலிபரப்பில் மட்டுமில்லாமல், நேரடியாக அவர்களை மகிழ்ச்சி படுத்தும் இது போன்ற இசை நிகழ்ச்சிகளை நடத்துவதே மின்னலின் நோக்கம் என்றும், தொடர்ந்து ஆதரவு தரும் நேயர்களுக்கு நன்றியும் தெரிவித்து கொண்டார் மின்னல் நிர்வாகி சுமதி.

ஆடல், பாடல், நகைச்சுவை, பல போட்டி நிகழ்ச்சி என முற்றிலும் நேயர்களை கவரும் வண்ணம் நிகழ்ச்சி அமைந்தது. அதிலும் சில நேயர்கள் தங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்தினார்.

நேயர் ஒருவர் பல விதமான குரல்களில் பேசி, பாடல்களைப் பாடி, மிருகங்களின் சத்தங்களையும் எழுப்பி நேயர்களிடம் கைத்தட்டல் பெற்றார். இப்படியாக நேயர்களுக்கு மகிழ்வான இரவாக இந்த இசை நிகழ்ச்சி இருந்ததாக மேடையில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நேயர்கள் சொன்னார்கள்.

மின்னலின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போன நேயர்களுக்கு மின்னலின் இசை நிகழ்ச்சியின் பாடல்களைப் பதிவு செய்துள்ளதாகவும், அவை தீபாவளி முதல் நாள் இரவு மின்னலில் ஒலிபரப்பு செய்யப்படும் என்றும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணன் தெரிவித்தார்.

மின்னலின் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: