Home One Line P1 மலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம், இந்தியா-மலேசியா உறவை பாதிக்காது!- சைபுடின்

மலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம், இந்தியா-மலேசியா உறவை பாதிக்காது!- சைபுடின்

977
0
SHARE
Ad
சைபுடின் அப்துல்லா

கோலாலம்பூர்: அண்மையில் டுவிட்டரில் மலேசியாவை புறக்கணியுங்கள் (#BoycottMalaysia) என்ற ஹேஸ்டேக் பரவலாகப் பகிரப்பட்டு டுவிட்டரில் முதலிடத்தைப் பெற்றது.  இந்தியர்களால் தொடங்கப்பட்ட இந்த இணையப் பிரச்சாரம் மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான அனைத்துலக முன்னணி மற்றும் இருதரப்பு உறவுகளை பாதிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

ஜம்முகாஷ்மீர் பிரச்சனை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையில், புறக்கணிப்பு அப்பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது அது தொடர்பான குரல்கள் வீழ்ச்சியடைந்து வருவதாக சைபுடின் தெரிவித்தார்.

நாங்கள் பகுப்பாய்வு செய்துள்ளோம். புறக்கணிப்பு பிரச்சாரம் குறைந்து கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். அது இன்று (செவ்வாய்க்கிழமை) இல்லை என்று கூறலாம்என்று இன்று செவ்வாய்க்கிழமை அவர் கூறினார்.