Home One Line P2 இவ்வார இறுதியில் ஜப்பானை தாக்கும் ஹாகிபிஸ் புயல்!

இவ்வார இறுதியில் ஜப்பானை தாக்கும் ஹாகிபிஸ் புயல்!

883
0
SHARE
Ad

தோக்கியோ: இவ்வார இறுதியில் ஜப்பானிய தெற்கு பசிபிக் கடற்கரையைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் ஹாகிபிஸ் புயல் என்ற செய்தி அப்பகுதி மக்களுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஜப்பானில் வசிப்பவர்கள் இந்த இயற்கை சீற்றத்திற்கு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

ஹாகிபிஸ் புயல் ஜப்பானின் கியுஷு, ஷிகோகு மற்றும் ஹொன்ஷு உள்ளிட்ட பல பகுதிகளைத் தாக்கும் என்று கூறப்படுகிறது.

நேற்று செவ்வாயன்று, 19-வது முறையாக ஜப்பானை தாக்க இருக்கும் இந்த புயல், முக்கிய தீவுகளைத் தாக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஆரம்பகால ஏற்பாடுகளைச் செய்யுமாறு அப்பகுதியில் வசிப்பவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை காலை, ஹாகிபிஸ் புயல் மரியானா தீவுகளுக்கு வடக்கே நகர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது வடக்கு நோக்கித் சென்று வெள்ளிக்கிழமை ஒகினாவாவில் உள்ள டைடோஜிமாவை சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாகிபிஸ் புயல் கியுஷு, ஷிகோகு மற்றும் ஹொன்ஷு ஆகிய இடங்களுக்கு சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம், இரண்டு புயல்கள் ஜப்பானை மோசமாக தாக்கியது. ஜப்பானிய தலைநகருக்கு அருகிலுள்ள ஷிசுவோகா நகரில், ஃபாக்ஸாய் புயல் ஏற்பட்டு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதிகளில் கிட்டத்தட்ட 290,000 குடியிருப்பாளர்கள் மின்சார துண்டிப்பால் பாதிக்கப்பட்டனர். மேலும், 10 வீடுகள் மோசமாக சேதமடைந்தன.