இதனிடையே, நடிகர் சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டபடி படத்தில் நடித்து கொடுக்க தவறிவிட்டதாக திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
சிம்பு படப்பிடிப்புக்கு வர மறுப்பதால், அதிகச் செலவு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தமது புகாரில் கூறியுள்ளார்.
முன்னதாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு என்கிற படம் உருவாகவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆயினும், மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதாக படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார் .