Home One Line P1 சுல்தான் ஷாராபுடின்: நஜிப் புக்கிட் அமானில் தமது வாக்குமூலத்தை அளித்தார்!

சுல்தான் ஷாராபுடின்: நஜிப் புக்கிட் அமானில் தமது வாக்குமூலத்தை அளித்தார்!

686
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ‘ங்கா கோர் மிங் சூப்பர் பேன்ஸ் பேஜ்முகநூல் பக்கத்தில் சுல்தான் ஷாராபுடினுக்கு எதிராக வெளியிடப்பட்ட அவதூறு கருத்துகள் தொடர்பான விசாரணைக்கு உதவ முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று வெள்ளிக்கிழமை புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் தமது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை, புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்ததோ ஹுசிர் முகமட், சாட்சியங்களை வழங்க நஜிப் இன்று புக்கிட் அமானுக்கு வருவார் என்பதை உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, பேராக் ஜசெக தலைவர் ங்கா கோர் மிங் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று, அவதூறான பதிவை வெளியிட்டநஜிப் ரசாக்என்ற முகநூல் பக்கத்தை விசாரிக்க காவல் துறைக்கு அழைப்பு விடுத்தார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இத்ரிஸ் ஷாவுக்கு எதிரான தேசத்துரோக அறிக்கையை முகநூல் பதிவு மூலம் வெளியிடப்பட்டதற்கு ங்கா மீது நடவடிக்கை எடுக்குமாறு  நஜிப் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதியன்று, ‘ங்கா கோர் மிங் சூப்பர் பேன்ஸ் பேஜ்என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு இடுகை குறித்து சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. சிலாங்கூரில் இருமொழி தெரு அடையாளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்ற முடிவை எதிர்த்து சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராக சீனர்களை எதிர்ப்பதற்கு அது தூண்டியதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், ங்கா, அந்த பதிவினை ங்கா அல்லது ஜசெகாவோ ஈடுபடவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், அது போலிக் கணக்கு மூலம் பகிரப்பட்டது என்று அவர் கூறினார்.