Home One Line P1 தாய்லாந்து- மலேசியா எல்லையில் சட்டவிரோத பொருட்களை அனுமதிக்கும் அதிகாரிகளை காவல் துறை கண்டறிந்துள்ளது!

தாய்லாந்து- மலேசியா எல்லையில் சட்டவிரோத பொருட்களை அனுமதிக்கும் அதிகாரிகளை காவல் துறை கண்டறிந்துள்ளது!

601
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடத்தல்காரர்கள் தாய்லாந்துமலேசியா எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக பொருட்களை அனுமதிக்கும் காணொளியில் சிக்கிய பல நபர்களை புக்கிட் அமான் அடையாளம் கண்டுள்ளதாக காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

காவல்துறையின் நேர்மை மற்றும் தரநிலை இணக்கத் துறை (ஐஎஸ்சிடி) மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை (கெடிஎன்கேஏ) ஆகியவை காணொளிகள் கடந்த மாதத்தின் பிற்பகுதியில் கிடைத்ததிலிருந்து விசாரணையைத் தொடங்கியதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

புக்கிட் அமான் குறிப்பிட்ட அந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

ஆம், நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். ஐஎஸ்சிடி மற்றும் கெடிஎன்கேஏ புக்கிட் அமான் கடந்த மாதத்தின் பிற்பகுதியில் இருந்து விசாரணையைத் தொடங்கினர். சித்தரிக்கப்பட்டுள்ள பல காவல்துறையினரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் ஒழுங்கு நடவடிக்கை நடந்து வருகிறதுஎன்று அவர் கூறினார்.

முன்னதாக இன்று வெள்ளிக்கிழமை , எம்ஏசிசி தலைவர் லத்தீபா கோயா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், தாய்லாந்து– மலேசியா எல்லையில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது என்றும், இதில் கடத்தல்காரர்களை காவல் துறையினர் அவர்களை தாண்டி செல்வதை அனுமதிப்பதைக் காட்டும் காணொளி வெளியாகி உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.