Home இந்தியா மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 162 தொகுதிகள் – ஹரியானாவில் 37 தொகுதிகள்

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 162 தொகுதிகள் – ஹரியானாவில் 37 தொகுதிகள்

822
0
SHARE
Ad

மகாராஷ்டிரா

மும்பை (மலேசிய நேரம் மாலை 4:00 மணி நிலவரம்) மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜகசிவசேனா கூட்டணி இதுவரையில் 165 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது.

#TamilSchoolmychoice

மகாராஷ்டிராவில் பாஜக  வெற்றியை நோக்கிச் செல்லும் என்று ஏற்கனவே வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளை நிரூபிக்கும் வண்ணம் பாஜக இதுவரையில் தனித்து 105 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது.

குறைந்த பட்சம் 144 தொகுதிகளை வென்றால்தான் தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில் பாஜக தனித்து இங்கு ஆட்சி அமைக்க முடியாது.

எனினும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா 61 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

காங்கிரஸ் கூட்டணி 96 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. 41 இடங்களை காங்கிரசும், 52 இடங்களை என்சிபி கட்சியும் கைப்பற்றியிருக்கின்றன.

ஹரியானா

இதற்கிடையே, சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற மற்றொரு மாநிலமான ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரையில் வெளியிடப்பட்ட முடிவுகளின் படி பாஜக தனித்து 36 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

ஆட்சி அமைக்க 45 இடங்கள் தேவைப்படும் என்ற நிலையில், காங்கிரஸ் 34 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

எஞ்சிய கட்சிகள் 20 சட்டமன்றங்களைக் கைப்பற்றியிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து ஹரியானாவில் வெற்றி பெற்ற உதிரிக் கட்சிகள் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க உதவுமா அல்லது காங்கிரசுடன் இணையுமா என்ற இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது.

(மேலும் விவரங்கள் தொடரும்)